Infotainment

Hi Folks, This forum is about Arts, Culture, Entertainment, G K, Music, Cinema, Tamil etc. etc., I dont want to restrict this forum for this alone, as the sky is the limit to discuss
 
HomeHome  PortalPortal  CalendarCalendar  FAQFAQ  SearchSearch  MemberlistMemberlist  UsergroupsUsergroups  RegisterRegister  Log inLog in  

Share | 
 

 உடைந்த கடவுள் (1)

View previous topic View next topic Go down 
AuthorMessage
Selva
Admin
Admin


Cancer Posts : 79
Join date : 2010-11-22
Age : 43
Location : Chennai, India

PostSubject: உடைந்த கடவுள் (1)    Mon Nov 29, 2010 11:35 pm

உடைந்த கடவுள் (1) - வித்யாசாகர்

பசையோடு கையும் தேய
போஸ்டர் ஒட்டிய
எந்த பாட்டாளியையும்
எந்த தலைவனுமே திரும்பிப்
பார்ப்பதில்€ல்

பாட்டளிகளின்
சாமியறையில் மட்டும் எப்படியோ
மாலையும் பொட்டுமாய்
நிறைய பேர் வெட்டியாக!!

என்றோ
பல ஆண்டுகளாய் பூமியில்
புதைந்து கிடக்கிறது
தங்கம்

தோண்டி எடுத்தவன்
தானே செய்ததாக
சொன்னான்,
செம்மொழி!

ஒவ்வொரு முறை
கண்ணாடிக் குவளையில்
தண்­ர் ஊற்றும் போதும் -

விஸ்கியின் சிவந்த நிறம்
குவளையிலிருந்து இதயம் வரை
நிரைகிறதாம் நண்பன் சொன்னான்.

எனக்கு, எங்கோ யாரோ
சாப்பிடாமல் பட்டினியில் உயிர் விட்ட
ஒரு சோற்றுப் பொட்டலத்தின் விலை
பத்தோ இருபதோ -
நினைவிற்கு வந்தது!!

தெருவெல்லாம் சுத்தம்
செய்தான்,
சாக்கடை நீரில் இறங்கி
தூர் வாரினான்,
உடைந்த சுவரு பூசி
மெழுகி கொடுத்தான்,
இரவு கருக்கையில் தெருவோரம்
விழுந்துக் கிடந்தான் -
மது அவனை குடித்திருந்தது.

வெறும் நாற்றமென்று மூக்கை பிடித்து
ஒதுங்கி சென்றோ -
குடிகாரன் என்ற ஒற்றை வார்த்தையிலோ
சுருங்கி அடங்கிப் போகிறோம் நாம்
மானுடம் வலுக் கொள்கிறதா என்றால்
இல்லை என்கிறது - இக்கவிதை!

ஊரெல்லாம்
இருந்த குளங்கள்
பிளாட் போட்டு
விற்பனையாகி விட்டது;

ப்ளாட்டிற்குள்
ஸ்விமிங் புல்
கட்டியாகி விட்டது

ஸ்விம்மிங் புல்லின் கரையில் இருந்து
நினைத்துக் கொள்கிறோம் -
குளக் கரையின் சில்லென்ற காற்றை!

ஸ்விம்மிங் புல்
சிரித்துக் கொண்டது,
குளக்கரை நம் கைவிட்டு
எங்கோ போனது;

ஏதோ ஒரு விதத்தில் ஏற்பட்ட இழப்பை
வளர்ச்சி என்றே சொல்லிக்கொள்கிறோம்
நாம் மட்டும்!


Back to top Go down
View user profile http://tamec.forumotions.in
 
உடைந்த கடவுள் (1)
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
Infotainment :: Your first forum-
Jump to: