Infotainment

Hi Folks, This forum is about Arts, Culture, Entertainment, G K, Music, Cinema, Tamil etc. etc., I dont want to restrict this forum for this alone, as the sky is the limit to discuss
 
HomeHome  PortalPortal  CalendarCalendar  FAQFAQ  SearchSearch  MemberlistMemberlist  UsergroupsUsergroups  RegisterRegister  Log inLog in  

Share | 
 

 உடைந்த கடவுள் (4)

View previous topic View next topic Go down 
AuthorMessage
Selva
Admin
Admin


Cancer Posts : 79
Join date : 2010-11-22
Age : 43
Location : Chennai, India

PostSubject: உடைந்த கடவுள் (4)   Mon Nov 29, 2010 11:39 pm

உடைந்த கடவுள் (4) - வித்யாசாகர்

கனவுகள் விற்றே
கவிதைகளை
வாங்குவார்களாம்
நான் உறக்கத்தையே
கேட்காததால் -
கனவுகளை வாங்க
துணிவதில்லை!!

மணித்துளிகளை
உடைத்து
உள்புகுந்துக் கொள்கிறது
கவிதை;

புரியவும்
அர்த்தப்படவுமே
நாட்களும் -
வருடங்களும்
தேவைப்படலாம்!

நகம்கடித்து
துப்புவதாகவே
எண்ணிக் கொள்கிறார்கள்
நிறையபேர் -
பிறரின் உணர்வுகளை;

உணர்வுகள் கண்­ணீராய் ஊறி
காய்ந்துவிடுவதாகவே எண்ணம்
அவர்களுக்கு.

பிறரின் மன வடுக்கள்
பிறருக்கு -
முழுதாக தெரிவதேயில்லை!

மனதை அறுத்தும்
கெடுத்தும்
திருத்தவும் செய்யும்
நிறைய விசயங்களை
சொல்லித் தருகிறோம்
சினிமாவிற்கு

சினிமா
அதையே
திருப்பி நமக்கு சொல்லிக் கொடுத்து
நம் சந்ததிக்கும்
விட்டு செல்கிறது -
மனதை அறுக்கும் குடுக்கும்
விசயங்களை!!

ஐம்பது ரூபாய்
கொடுத்து குடிப்பவன் கூட
ஐந்து ரூபாய் கொடுத்து
இட்டிலி சாப்பிட - மறுத்து
ஏழை என்கிறான்.

இட்டிலி பணக்காரத்தனம்
எனில் -
ஐம்பது ரூபாய் விஸ்கி?

கேள்வி கேட்கவில்லை
எல்லோரும் எங்கோ சமமாகவே இருக்கிறோம்
பயன்படலில், படுத்துதலில்
விழுந்தது போல் -
ஏற்றத்தாழ்வு விரிசல்களும்
வெற்றுமை கோடுகள்!

செய்கூலி இல்லை
சேதாரம் இல்லை
பத்து சவரன் வாங்கினால்
ஒரு கிராம் இலவசம்

எல்லாம் விளம்பரத்தில் மட்டுமே
பார்க்க முடிந்தது -
தெருவில் பிளாஸ்டிக் வளையல் விற்ற
ஏழை பெண்ணிற்கு!!

மூச்சுமுட்ட
சோறு தின்று
விடும் ஏப்பத்திற்கு தெரிவதில்லை
பத்து நாள் பட்டினியின்
கொடுமை;

பத்து பைசா தட்டில்
போட்டுவிட்டால் போதும்
ஏப்பத்தின் சப்தம்
எல்லோருக்கும் கேட்கலாம்!!

ஐம்பது சதவிகிதம்
தள்ளுபடி;

எல்லாமே வெளிநாட்டிலிருந்து
இறக்குமதி செய்த ஆடைகள்

இரண்டு வாங்கினால்
ஒன்று இனாமாக தரப்படும்

வேறெங்குமே
கிடைத்திடாத தரம்

இப்படியெல்லாம் ஏமாற்றித் தான்
விலைபோகிறது -
ஏழைகளின் வியர்வையும் ரத்தமும்!!

ஒரு 'கிலோ' கத்தரிக்காய்
இரண்டு ரூபாய்

இரண்டு 'கிலோ' உப்பு
ஒரு ரூபாய்

ஒரு 'கிலோ' பருப்பு
பத்து ரூபாய்

பத்து 'கிலோ' அரிசி
நானூறு ரூபாய் - என்று
கணக்கெழுதும் அண்ணாச்சிக்கும்
வாங்குவோருக்கும்
'கிலோ' தமிழ் என்றே தெரியப்பட்டுள்ளது!



Back to top Go down
View user profile http://tamec.forumotions.in
 
உடைந்த கடவுள் (4)
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
Infotainment :: Your first forum-
Jump to: